பாடலாசிரியராக புரோமோஷன் ஆன விஜயசேதுபதி!

Bookmark and Share

பாடலாசிரியராக புரோமோஷன் ஆன விஜயசேதுபதி!

வன்மம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்பது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. இதில் ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்களை தயாரித்து நடிக்கிறார்.

ஆரஞ்சு மிட்டாய் படத்தை பொறுத்தவரை முதன்முறையாக அப்படத்தில் வசனகர்த்தாவாக அவதரித்துள்ள விஜயசேதுபதி, ஒரு பாடலையும் பாட இருக்கிறார். ஆனால், படத்தின் புரோமோஷனுக்காக தயாராக இருக்கும் அந்த பாடலை அவரே எழுதி, பாடப்போகிறாராம்.

அந்த வகையில், தான் எழுதும் முதல் பாடல் மட்டுமின்றி, பாடும் முதல் பாடலும் இதுவே என்பதால், அது பேசப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, தற்போது நேரம் கிடைக்கும்போது அமர்ந்து அந்த பாடலை எழுதி வரும் விஜயசேதுபதி, அந்த டியூனுக்கேற்ப பாடியும் பயிற்சி எடுத்துக்கொண்டிருககிறார்.

மேலும், தான் நடிகராக மட்டுமே செயல்படும் கம்பெனிகளில் நடித்துக்கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளும் விஜயசேதுபதி, தயாரிக்கும் படங்களில் கதை கேட்பதில் தொடங்கி ஒவ்வொரு விசயத்தையும் உன்னிப்பாக கவனிக்கிறாராம்.

அந்த வகையில், கதை கேட்கும்போதே அதில் தனது கருத்துக்களையும் சேர்ப்பவர், திரைக்கதை, வசனம் என எல்லா விசயங்களிலும் தன்னுடைய சொந்த யோசனைகளையும் புகுத்தி வருகிறாராம்.

அவரது இந்த ஆர்வத்தைப் பார்த்து, இப்படியே போனால் விரைவில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions