படத்துக்காக கூலி வேலை பார்த்த ஹீரோ, ஹீரோயின்கள்

Bookmark and Share

படத்துக்காக கூலி வேலை பார்த்த ஹீரோ, ஹீரோயின்கள்

ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி தயாரிக்கும் படம் மேற்கு தொடர்ச்சி மலை. விஜய் சேதுபதியின் நண்பர் லெனின் பாரதி இப்படத்தை இயக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார்.

களவாணி, வெண்ணிலா கபடி குழு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார், புதுமுகம் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். தேவாராம், கோம்பை, பண்ணையபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தமிழ்நாட்டையும், கேரளாவையும் பிரிக்கும் எல்லைக்கோடு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வாழும் மக்களின் வலியை சொல்லும் படம். 

தமிழ்நாட்டு அடிவாரத்தில் உள்ள பண்ணையபுரம், மலைக்குமேல் கேரளாவில் உள்ள உடும்பன் கோவில் கிராமம் தான் கதையின் களம். நிலம் பிடுங்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கதை. 

இதுகுறித்து இயக்குனர் லெனின் பாரதி ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற கேரக்டர்களில் அந்த மக்களே நடித்திருக்கிறார்கள். "ஹீரோ, ஹீரோயினுக்கு நடிப்பு யதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக அவர்களை அந்த ஊர் மக்களோடு வேலைக்கு அனுப்பினோம். வெறும் 50 ரூபாய் கூலிக்கு பல நாட்கள் வேலைக்கு சென்று தங்களை தயார்படுத்திக் கொண்டார்கள்.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது பிலிம் பெஸ்ட்டிவலுக்கான படம் மட்டுமல்ல. மக்கள் ரசிப்புக்கும், சிந்தனைக்கும் உகந்த படமாக இருக்கும்" என்கிறார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions