போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

Bookmark and Share

போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் சமீபத்தில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்திருந்தார்.

வயதான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி தற்போது போலீசாக வந்து கவர இருக்கிறார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி ‘காக்க காக்க’ படத்தில் சூர்யா நடித்த அன்புச்செல்வன் மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ கமல் நடித்த ராகவன் கதாபாத்திரம் போன்று மிகவும் வலுவான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘காசேதுபதி’ என பெயர் வைத்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions