வெற்றிக்காக வெயிட் பண்ணும் விஜய் சேதுபதி

Bookmark and Share

வெற்றிக்காக வெயிட் பண்ணும் விஜய் சேதுபதி

2012ம் ஆண்டு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மூலம் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்த விஜய் சேதுபதி அடுத்து 2013ம் ஆண்டில் வெளிவந்த சூது கவ்வும் படமும் வெற்றிகரமாக அமைந்து விஜய் சேதுபதியின் இமேஜ் அப்படியே மாறியது.

அதற்கடுத்து வந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பெரிய வெற்றியைப் பெறவில்லை எனினும் விமர்சன ரீதியாக விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களை அள்ளிக் கொடுத்தது. 

அதன்பின் என்ன ஆனது என்று தெரியவில்லை தொடர்ந்து தோல்வியை சந்தித்தார் விஜய் சேதுபதி. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், இந்த ஆண்டில் இதுவரை புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய ஐந்து படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து அவருடைய வெற்றிப் பயணத்திற்கு தடை போட்டது.

ஆனால், விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவர இருக்கும் ஒவ்வொரு படங்களும் மீண்டும் அவரை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் அளவிற்கு உருவாகி வருவதாக தெரிகிறது.

“நானும் ரெளடிதான், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, நலன் குமாரசாமியின் படம், இறைவி” ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு நம்பிக்கை தரும் படங்களாக உள்ளது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் மெல்லிசை படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இனி, விஜய்சேதுபதி மெல்ல மெல்ல மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions