தர்மதுரை படம் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ்

Bookmark and Share

தர்மதுரை படம் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படம் வருகிற ஆக 19-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருக்காக படக்குழுவினர் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்தனர்.

படத்தை பார்த்த பின்னர், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஸ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை கண்டிப்பாக இப்படம் பூர்த்தி செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions