போலீஸ் ரோல் - ஜிம்முக்கு செல்லும் விஜய்சேதுபதி

Bookmark and Share

போலீஸ் ரோல் - ஜிம்முக்கு செல்லும் விஜய்சேதுபதி

ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்பதை பெரும்பாலான ஹீரோக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த விஷயத்தில் விஜய்சேதுபதி விதிவிலக்கு. நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய்சேதுபதி.

எனவே நண்பர்கள் தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தால் அதை தட்டமுடியாமல் கால்ஷீட் கொடுத்துவிடுகிறார். இதன் காரணமாக, நிறைய படங்களில் நடிக்கும் நடிகராக மாறிவிட்டார் விஜய்சேதுபதி.

தற்போது இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய், மெல்லிசை, நானும் ரௌடிதான், இறைவி, கைநீளம் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இவை தவிர புஷ்கர் காயத்ரி, கோகுல் இயக்கத்தில் நடிக்கவும் தலையாட்டி இருக்கிறார்.

இவற்றோடு பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநரான அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டராம் விஜய்சேதுபதிக்கு.

தற்போது கொஞ்சம் தொப்பையுடன் காணப்படும் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதால் தினமும் ஜிம்முக்கு சென்று தீவிரமாக வொர்க்அவுட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions