காக்காமுட்டையில் நம்பிக்கை வைத்த விஜய்சேதுபதி

Bookmark and Share

காக்காமுட்டையில் நம்பிக்கை வைத்த விஜய்சேதுபதி

பெரும்பாலான படங்கள் நஷ்டத்தை கொடுத்து வருவதால் நீண்டகாலமாக படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் தற்போது படங்கள் தயாரிப்பதில்லை. அதனால்தான் தனுஷ், ஆர்யா, விஷால், விதார்த், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம்மேனன் என பலரும் தயாரிப்பாளராகி விட்டனர். 

இந்த வரிசையில், சங்குதேவன் படத்திலேயே தயாரிப்பாளரானார் விஜயசேதுபதி. ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. பின் ஆரஞ்சு மிட்டாய் படத்தை தானே தயாரித்து அதோடு வயதான முதியவர் கெட்டப்பில் நடித்தார் விஜயசேதுபதி.

அது மட்டுமின்றி வசனம், பாடல்கள், பின்னணி என பல திறமைகளை காட்டியிருந்தார் அவர். அதனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இதனால் விஜயசேதுபதிக்கு 2 கோடிக்கு மேல் நஷ்டமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் என தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்துள்ள விஜயசேதுபதி, கதைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறாராம் விஜய்சேதுபதி.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions