விஜய்சேதுபதி சின்ன தலயா?

Bookmark and Share

விஜய்சேதுபதி சின்ன தலயா?

சமீபகாலமாக படங்களின் வெற்றிக்கு ரசிகர்களின் ஆரவாரமும் அவசியமாகியிருக்கிறது. அதனால்தான் வளர்ந்து விட்ட நடிகர்கள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்களும் ரசிகர் மன்றங்களை உஷார்படுத்தி வைத்துள்ளனர்.

குறிப்பாக, தங்களது ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் முக்கியமான தியேட்டர்களில் கட்அவுட் தோரணங்களை கட்டுவது. பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்று ரசிகர்களை வைத்து பரபரப்பு கூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்கள் திரைக்கு வரும்போது எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாகதான் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அவரும் தனது ரசிகர் மன்றங்களை உஷார்படுத்தி விட்டுள்ளார்.

அதனால் சேதுபதி படத்தின் ஆடியோ விழாவிலேயே காது கிழியும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி வந்த அவரது ரசிகர்கள், தற்போது சேதுபதி படம் வெளியாகியுள்ள முக்கியமான தியேட்டர்களில் விஜயசேதுபதியின் கட்அவுட்களை பெரிய அளவில் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

மேலும், சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி என்று பல நடிகர்கள் தங்களது பெயருக்கு முன்பு பட்டங்களை வைத்திருப்பது போன்று இப்போது சேதுபதி படத்தில் இருந்து விஜயசேதுபதிக்காக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை சின்ன தல என்று பட்டம் சூட்டி அவரது ரசிகர்கள் பப்ளிசிட்டி செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions