சவாலை சந்தித்த விஜயசேதுபதி!

Bookmark and Share

சவாலை சந்தித்த விஜயசேதுபதி!

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் என்றாலே ஒரு தனித்துவம் இருக்கும். சமூகப்பார்வை இருக்கும். கமர்சியலுக்காக தனது முகத்தை மாற்றிக்கொள்ளமாட்டார். அதோடு, சாதாரண ஹீரோக்கள்கூட அவர் படத்தில் நடித்தால் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து விடும்.

அந்த அளவுக்கு கதாபாத்திரங்களை சித்தரிப்பார். அந்த வகையில், ஜனநாதனின் முதல் படமான இயற்கையில் ஷாம், அருண்விஜய் இருவரும் நடித்தனர். அது அவர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது.

அதன்பிறகு ஜீவா நடித்த ஈ, பின்னர் ஜெயம்ரவி நடித்த பேராண்மை என மூன்று படங்களையும் வித்தியாசமான கதைக்களங்களில் இயக்கியிருந்தார். அதையடுத்து தற்போது புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா, விஜயசேதுபதி, ஷாம், கார்த்திகா என்ற நான்கு கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் விஜயசேதுபதிக்கு எமலிங்கம் என்ற மிக வித்தியாசமான வேடமாம்.

ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான வேடங்களாக நடித்து வரும் அவருக்கு இந்த படம் இன்னும் வித்தியாசமானதாக அமைந்துள்ளதாம். அதனால் நான் நடித்த படங்களில் இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்ததோடு, எனது திறமைக்கும் சவாலாக இருந்தது என்று நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் விஜயசேதுபதி.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions