வெளிநாட்டுப் பட ரீமேக்கில் விஜய் சேதுபதி

Bookmark and Share

வெளிநாட்டுப் பட ரீமேக்கில் விஜய் சேதுபதி

தமிழ்த் திரையுலக வரலாற்றில் நமக்குத் தெரிந்த வரையில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டுப் படத்தைக் காப்பி அடிக்காமல் பணம் கொடுத்து உரிமை வாங்கி படமாக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ள இந்தப் படத்தை இயக்கி வருபவர் நலன் குமாரசாமி.

சூது கவ்வும் படத்திற்குப் பிறகு இரண்டு, மூன்று கதைகளை எழுதிப் பார்த்த நலனுக்கு எதுவுமே திருப்தியாக அமையவில்லையாம். அதன் பின் சில வருடங்களுக்கு முன் பார்த்து ரசித்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்த ஞாபகம் வந்திருக்கிறது.

உடனே, அந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் சொல்ல அவர்  முறையாக அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.

உடனடியாக தமிழுக்கேற்றபடி திரைக்கதையமைக்கப்பட்டு, இப்போது படம் ஏறக்குறைய முடியும் தருவாயை நெருங்கி விட்டதாம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க 'பிரேமம் மலையாளப் படம் மூலம் சேட்டன்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடித்து வருகிறார்.

அப்படி என்னதான் அந்த வெளிநாட்டுப் படத்தின் கதை என்றால், “வாழ்க்கையை அதன் வழிலேயே போய் வாழும் ஒரு இளைஞன், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞி, பொருத்தமே இல்லாத இவர்கள் ஒரு புள்ளியில் சந்திக்க நேரிட அதன் பின் நடக்கும் விஷயம்தான் படமாம்”.

ஆனால், இது எந்த வெளிநாட்டுப் படம் என்று நலன் குமாரசாமி இப்போது சொல்லமாட்டாராம். அப்படி சொன்னால், படம் வெளிவருவதற்கு முன்பே என் படம் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்கிறார்.

இருந்தாலும் கதை என்னவென்று ஒரு வரியில் சொல்லிவிட்டார். இந்த ஒரு வரி போதாதா, நம் நெட்டிசன்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அது எந்த கொரியா, ஈரானிய, ஜப்பானிய, பிரெஞ்சு, ஆங்கிலப் படம் என்று கண்டுபிடித்து சொல்லிவிட மாட்டார்களா ?. ரெடி ஸ்டார்ட்...!


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions