விஜயசேதுபதி கொடுக்கும் இடைவெளி!

Bookmark and Share

விஜயசேதுபதி கொடுக்கும் இடைவெளி!

வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஒரு படம் அல்லது இரண்டு படங்களில்தான் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்கள். ஆனால் விஜயசேதுபதியோ, ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இடம் பொருள் ஏவல், பெஞ்ச் டாக்கீஸ், மெல்லிசை, நானும் ரவுடிதான். ஆரஞ்சு மிட்டாய், வசந்தகுமாரன், இறைவி, விக்ரம் வேதா என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி.

அதில் சில படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடிக்கிறார்.அதைப்பார்த்து ஒரே நேரத்தில் வித்தியாசமான பல கெட்டப்புகளில் எப்படி அவரால் நடிக்க முடிகிறது என்று பலரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.

இதுபற்றி அவரைக்கேட்டால், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை. இந்த படங்களில் எனது காஸ்டியூம், மீசை, தாடி போன்ற கெட்டப்புகள்தான் மாறுகிறது. மற்றபடி உடல்ரீதியான மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை.

மேலும், ஒரு படத்தில் பத்து நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்தேன் என்றால், அடுத்து சில நாட்கள் கேப் கொடுத்து அதற்கடுத்து நடிக்க வேண்டிய படத்தின் கேரக்டரை மனதில் ஓட விடுவேன்.

அதை உள்வாங்கிய பிறகுதான் அந்த படத்தில் நடிப்பேன். இப்படி சின்னச்சின்ன இடைவெளி கொடுத்து நடிப்பதால், முந்தைய படத்தின் சாயல் அடுத்த படத்தில் வெளிப்படாது. இதை நான் அந்தந்த படங்களின் டைரக்டர்களிடம் நடித்து காட்டி உறுதி செய்த பிறகுதான் நடிக்கிறேன் என்கிறார் விஜயசேதுபதி.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions