விட்டுக்கொடுக்கும் விஜயசேதுபதி!

Bookmark and Share

விட்டுக்கொடுக்கும் விஜயசேதுபதி!

விஜயசேதுபதி நடிக்கும் படங்களைப் பார்த்தால் அவருக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் இலலாமல், உடன் நடிக்கும் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அவர் அதிகமாக பேசவே மாட்டார்.

அவரை சுற்றியிருந்த நண்பர்கள்தான் அதிக டயலாக் பேசியிருந்தனர்.அதேபோல், ரம்மி படத்தில் இனிகோ பிரபாகர் நாயகனாக நடிக்க, விஜயசேதுபதி செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலும் இன்னொரு ஹீரோவுக்கு விட்டுக்கொடுத்து நடித்திருந்தவர், இப்போது இடம்பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தான் தயாரித்து வசனம் எழுதி நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்திலும், தனக்கு ஜோடியோ, டூயட்டோ இல்லாத 55 வயது முதியவர் கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜயசேதுபதி.

ஆனால், அப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கிற்கு ஹீரோ போன்ற வேடத்தை கொடுத்திருக்கிறார் விஜயசேதுபதி. அந்த வகையில், ரமேஷ்திலக்கிற்குதான், அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புதுமுக நடிகை அஷ்ரிதாவுடன் லவ், டூயட் எல்லாம் உள்ளதாம்.

விஜயசேதுபதி படத்தில் தனக்கு இத்தனை பெரிய ரோல்கிடைத்ததால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் ரமேஷ் திலக்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions