காத்துவாக்குல ரெண்டு காதல் செய்யப்போகும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

காத்துவாக்குல ரெண்டு காதல் செய்யப்போகும் விஜய் சேதுபதி!

‘போடா போடி’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்றப்போவது ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் இணையும் அந்த புதிய படத்திற்கான தலைப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, இப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பை வைத்துப் பார்க்கும்போது இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

அதனால், இரண்டு பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தை ‘நானும் ரவுடிதான்’ படம் போல் நகைச்சுவை மற்றும் காதல் கலந்து எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions