2016-யை அதிர வைக்கும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

2016-யை அதிர வைக்கும் விஜய் சேதுபதி!

விஜய்சேதுபதி நடிப்பில் முழுமையாகத் தயாராகி ஐந்துபடங்கள் உள்ளன. சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இடம்பொருள்ஏவல், ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் மெல்லிசை, கார்த்திக்சுப்புராஜ் இயக்கியிருக்கும் இறைவி, நலன்குமாரசாமியின் காதலும்கடந்துபோகும் ஆகியனவற்றோடு அவர் காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் சேதுபதி படமும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

இப்படங்கள் அடுத்தடுத்து வெளியானாலே அடுத்தஆண்டு முழுக்க அவருடைய படங்களாகத்தான் இருக்கும். இந்நிலையில் இரண்டுமாதங்களில் மொத்தமாக முடித்துவிடும் திட்டத்தோடு தர்மதுரை படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கடுத்து அவர் நடிக்கும் படத்துக்கான வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

அருண்விஜய்யை வைத்து வாடீல் படத்தை இயக்கியிருக்கும் சிவஞானம் இயக்கும் படமொன்றில் விஜய்சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கிறாராம். அந்தப்படத்தின் கதையை இறுதிசெய்துவிட்டு இப்போது படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் என்பவர் இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions