இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி!

Bookmark and Share

இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி!

வினேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள நானும் ரவுடிதான் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பின் விஜய்சேதுபதியின் மெல்லிசை வெளியாக தயாராகியுள்ளது.

இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “இயக்குனர்  ராமின் உதவியாளர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். ரொம்ப ஆழமான காதல்  கதை. காயத்ரி எனக்கு ஜோடி. நான் இசையமைப்பாளராக வருகிறேன்; காயத்ரி, பாட்டு  டீச்சர். இந்த படம் ஒரு, எமோஷனல் கதை. ஹீரோ, ஹீரோயின், இரண்டு பேரின் அன்பை  பற்றிய கதை. பெரியதாக வில்லன் இல்லை; ஆனால், படத்தில் வில்லன் இருக்கிறார்.

மேலும் இவர் மெல்லிசை படத்தில் நடிக்க காயத்ரிக்கு சிபாரிசு செய்துள்ளார். இது குறித்து அவர், “ காயத்ரியுடன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்துள்ளேன். அந்த சமயம் அவர், பொன்மாலைப் பொழுது போன்ற  படங்களில் நடித்து இருந்தார். 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், ஒரு சின்ன, கேரக்டர் தான் அவருக்கு. பேய் மாதிரி இருக்குப்பா...போன்ற, டயலாக் எல்லாம் பேச, வேற எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  

அந்த, கேரக்டர் மேல் இருந்த நம்பிக்கையில், காயத்ரி நடிக்க ஒப்புக் கொண்டார்.  அவரிடம் நடிப்பும், ரியாக் ஷனும் என்னை தூக்கி சாப்பிடும் அளவுக்கு  இருந்தது. காயத்ரியை வைத்து, ஒரு, டெஸ்ட் எடுத்து பார்த்ததில் இயக்குனருக்கும் மகிழ்ச்சி. இந்த படம், காயத்ரிக்கு நல்ல பெயரை கொடுக்கும்” என்றார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions