மே 15 ரிலீஸ்... பின்வாங்கும் படம் எது?

Bookmark and Share

மே 15 ரிலீஸ்... பின்வாங்கும் படம் எது?

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், யுடிவி நிறுவனம்  தயாரித்துள்ள படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்திருக்கும் படம்.

படத்தை யுடிவி உடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது.  புறம்போக்கு படம் இடதுசாரி பார்வை கொண்ட, கருத்துகள் கொண்ட படம் என்பதால் அதை தொழிலாளர் தினமான மே1-ஆம் தேதி வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் எஸ்.பி.ஜனநாதன்.  

பட வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருந்தார்கள்!  அதே தினத்தில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படமும் ரீலிசாகிறது.  உத்தம வில்லன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருவதால் இப்படம் சுமார் 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.  

இதனால் எந்த படத்திற்கும் நாங்கள் போட்டியாக  இருக்க விரும்பவில்லை என்று அறிவித்தார் யுடிவி தனஞ்செயன். அதோடு, புறம்போக்கு படத்தின் ரிலீஸ் தேதியை மே 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்.

புறம்போக்கு மே 15க்கு ரிலீஸ் என்று  அறிவித்த சில நிமிடங்களில் மாஸ் படமும் மே 15 அன்று ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. புறம்போக்கு, மாஸ் இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டில் ஒரு படம்தான் மே 15 அன்று ரிலீஸ் ஆகும். இரண்டில் ஒரு படம் மே 22க்கு தள்ளி வைக்கப்படும் என்கிறார்கள் திரையரங்க அதிபர்கள் வட்டாரத்தில். 

 

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions