விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா நடிக்கும் “இறைவி” படப்பிடிப்பு துவங்கியது!

Bookmark and Share

விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா நடிக்கும் “இறைவி” படப்பிடிப்பு துவங்கியது!

அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சீவி குமார், கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார்.

இறைவி எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை பிட்சா, ஜிகர்தண்டா வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சூப்புராஜ் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

முதன்முறையாக விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சென்னையில் இன்று SJ சூர்யா, பாபி சிம்ஹா நடித்த காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions