தனுஷுடன் இணையும் ஜீவா, விஜய்சேதுபதி?

Bookmark and Share

தனுஷுடன் இணையும் ஜீவா, விஜய்சேதுபதி?

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். ‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ்-சமந்தா ஜோடி சேரும் இரண்டாவது படம் இது.

இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறது. தற்போது நிறைய கதாநாயகர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது பிரபலமாகி வரும் நிலையில், இந்த படத்திலும் சில பிரபல கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஜீவா மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும், ஜீவாவும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் அவர்களையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது படத்திற்கு கூடுதல் பலமாகவும் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions