விஜய் சேதுபதியின் இரண்டாவது கதாநாயகி ரெடி!

Bookmark and Share

விஜய் சேதுபதியின் இரண்டாவது கதாநாயகி ரெடி!

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். இதில் முதல் கதாநாயகியாக தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த கதாநாயகியை தேடி வந்த நிலையில், ‘மேகா’ படத்தில் நடித்த சிருஷ்டி டாங்கேவை தேர்வு செய்துள்ளனர். அடுத்தபடியாக மூன்றாவது கதாநாயகியை தேடும் படலம் நடந்து வருகிறது.

தர்மதுரை படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக சுரேஷ் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இப்படம் மூலம் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions