ஹன்சிகாவுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயசேதுபதி!

Bookmark and Share

ஹன்சிகாவுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயசேதுபதி!

பீட்சா படத்தில் ரம்யா நம்பீசன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி, ரம்மியில் ஐஸ்வர்யா ராஜேஷ், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் நந்திதா என தனது ஆரம்ப கால படங்களில் வளர்ந்து வரும் நடிகைகளுடன் நடித்து வந்தவர் விஜயசேதுபதி.

அதையடுத்து சில படங்களுக்குப் பிறகுதான் தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் நானும் ரெளடிதான் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார். அப்போது நான் நயன்தாராவின் ரசிகன் என்றும் பெருமையாக சொல்லிக்கொண்டார். இதனால் மற்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போலவே விஜயசேதுபதியுடனும் ரொமான்ஸ் காட்சியில் அதிக நெருக்கம் காட்டி நடித்தார் நயன்தாரா.

இந்தநிலையில், தற்போது இடம்பொருள் ஏவல், மெல்லிசை போன்ற படங்களில் நந்திதா, காயத்ரி என தனது முந்தைய படங்களில் நடித்த நாயகிகளுடனேயே நடித்துள்ள விஜயசேதுபதி, தன்னை புதிதாக புக் பண்ண வந்த ஒரு நிறுவனத்திடம் கதாநாயகியாக ஹன்சிகாவை புக் பண்ணுங்கள் என்று கூறினாராம். ஆனால், அதையடுத்து அவர்கள் ஹன்சிகாவை புக் பண்ண சென்றபோது, இவர்கள் கேட்ட தேதியில் அவர் வெவ்வேறு படங்களுக்கு கால்சீட் கொடுத்திருந்தாராம். அதனால் இயலாமையை அவர்கள் விஜயசேதுபதியுடம் சொன்னார்களாம்.

இருப்பினும், ஓகே இந்த படம் இல்லேன்னா என்ன, இன்னொரு படத்தில் ஹன்சிகாவுடன் நடித்தால் போச்சு என்று அதை கேசுவலாக எடுத்துக்கொண்டாராம் விஜயசேதுபதி.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions