இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!

Bookmark and Share

இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!

ஷாம், ஆர்யாவுடன் இணைந்து விஜய்சேதுபதி நடித்த புறம்போக்கு வெளியானதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ரிலீசுக்கு தயார்நிலையில் இருக்கும் இடம்பொருள் ஏவல் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அட்டகத்தி நந்திதா நடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து விஜயசேதுபதி நடித்துள்ள மெல்லிசை, ஆரஞ்சுமிட்டாய் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த படங்களில் இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து ஆரஞ்சுமிட்டாய் ரிலீசுக்கு வருவது உறுதியாகி விட்டது.

இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள விஜயசேதுபதி, வசனமும் எழுதியிருக்கிறார். மேலும், ஏற்கனவே பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்த சங்குதேவன் பிரச்சினையாகி விட்டதால், தனது தயாரிப்பில் உருவான இந்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை ஹிட் பண்ணி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் விஜயசேதுபதி.

அதோடு, இந்த படத்திற்கு பிறகு தனுஷ், விஷால், ஆர்யா என சில ஹீரோக்கள் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருவது போன்று தனது தயாரிப்பில் தான் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் விஜயசேதுபதி.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions