விவாசாயியாகும் விஜய் சேதுபதி

Bookmark and Share

விவாசாயியாகும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அவர் தற்போது, 96, சூப்பர் டீலக்ஸ், ஜுங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி, டிராபிக் ராமசாமி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

இந்நிலையில், விஜய் சேதுபதி அடுத்ததாக விவசாயம் சம்பந்தப்பட்ட கதை ஒன்றிலும் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தை ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

மேலும் அந்த படத்திற்கு கடைசி விவசாயி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கிறாராம். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக காமெடி கலந்த திரைக்கதை அமைக்க மணிகண்டன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions