விஜய் சேதுபதி-நலன் குமாரசாமி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

Bookmark and Share

விஜய் சேதுபதி-நலன் குமாரசாமி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சூது கவ்வும்’. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படக்குழு மீண்டும் ஒரு புதுப்படம் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்திலும் விஜய் சேதுபதியே நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக மடோனா நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இதனை ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாக்க உள்ளனர்.

இப்படத்தை திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சி.வி.குமார் தயாரிக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா வழங்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் விஜய் சேதுபதி, நாயகி மடோனா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions