மா.கா.பா.ஆனந்தின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

மா.கா.பா.ஆனந்தின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானவர்களில் மா.கா.பா.ஆனந்தும் ஒருவர். இவர் தற்போது ‘அட்டி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகியாக அஸ்விதா என்பவர் நடித்துள்ளார்.

விஜய பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு சுந்தர்.சி. பாபு இசையமைத்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

‘அட்டி’ படம் வடசென்னையில் வாழும் நான்கு இளைஞர்களை பற்றிய படம். முழுக்க முழுக்க காமெடி, ஆக்ஷன் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மா.கா.பா. வடசென்னையில் கானா பாடகராக நடித்திருக்கிறாராம். வடசென்னையில் இளைஞர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தை ‘அட்டி’ என்று குறிப்பிடுவார்களாம். அதையே, இப்படத்திற்கும் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குனர் விஜய பாஸ்கர்.

இப்படத்தில் ‘அட்டி’ என்ற தலைப்பை விளக்கிச் சொல்வதுபோல் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் சுந்தர்.சி. பாபு. அதுமட்டுமில்லாமல், ‘அட்டி’ என்ற தலைப்பை விளக்கி சொல்வதற்காக விஜய் சேதுபதியும் இப்படத்தின் ஆரம்பத்தில் நடித்திருக்கிறாராம். இப்படத்தை இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு வெளியிடவிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும்போதே படம் ரொம்பவும் எனக்கு பிடித்துப் போய்விட்டது. இந்த டீமும் எனக்கு ரொம்ப பிடித்துப் போனது. தயாரிப்பாளர்களிடம் நல்ல உறவு இருந்ததால் இந்த படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறினேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள் என்று கூறினார்.

இப்படம் வருகிற ஜுலை 7-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலும் ஏற்பட்டுள்ளது. 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions