விஜய்சேதுபதிக்கு ஜோடியான சிம்பு படத்தின் ஹீரோயின்!

Bookmark and Share

விஜய்சேதுபதிக்கு ஜோடியான சிம்பு படத்தின் ஹீரோயின்!

‘நானும் ரௌடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும்’ என ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஏற்கெனவே நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் படங்கள் ‘இறைவி, இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை’.

தற்போது, ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ எனும் படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘வா டீல்’ இயக்குநர் ரத்தின சிவாவின் ‘றெக்க’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியுள்ளார். கே.வி.ஆனந்த் இயக்குநராக சூர்யாவின் ‘அயன், மாற்றான்’, தனுஷின் ‘அனேகன்’ போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. சுபா வசனம் எழுதுகிறார்கள்.

மேலும், படத்தின் ஹைலைட் என்னவென்றால், விஜய டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தான். இதற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளாராம். 

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ புகழ் மஞ்சிமா மோகனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions