சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்

Bookmark and Share

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்தார்.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தொடங்கினார். இப்படத்தை சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி என்பவர் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கேரளாவில் நடைபெறும் 21-வது கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் திரையிட போட்டியிட்ட 18 படங்களில் இந்த படம் மட்டுமே தேர்வாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது அவருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions