பிரேமம் பட நாயகியின் நடிப்பை பார்த்து வியந்த விஜய் சேதுபதி

Bookmark and Share

பிரேமம் பட நாயகியின் நடிப்பை பார்த்து வியந்த விஜய் சேதுபதி

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மடோனா. இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ‘சூதுகவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமரசாமி இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கிறது.

கொரியன் ரீமேக் படம் இது. விஜய் சேதுபதி இப்படத்தில் கவுன்சிலரிடம் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். நாயகி மடோனா சென்னையில் வேலை தேடும் பெண்ணாக நடித்திருக்கிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல் எப்படி உருவாகிறது என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் காமெடிக்கென்று தனி டிராக் இல்லாமல், கதையோடு ஒன்றி காமெடியை இணைத்திருக்கிறார்கள். 2 பாடல்கள் மற்றும் 2 சண்டைக்காட்சிகளும் இடம் பெறுகின்றன.

சமுத்திரக்கனி இப்படத்தில் போலீஸ் எஸ்.ஐ.யாக நடித்திருக்கிறார். நலன் இயக்கிய ‘சூதுகவ்வும்’ படத்தை விட முற்றிலும் மாறுபட்ட படமாக எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் மடோனாவின் நடிப்பைப் பார்த்து விஜய் சேதுபதி வியந்திருக்கிறார். அந்தளவிற்கு விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மடோனா.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions