விஜயசேதுபதி-நயன்தாராவினால் தாமதமாகும் தனுஷ் படம்!

Bookmark and Share

விஜயசேதுபதி-நயன்தாராவினால் தாமதமாகும் தனுஷ் படம்!

தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதி-நயன்தாரா இணைந்துள்ள படம் நானும் ரவுடிதான். ஆனந்தராஜ் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார்.

ஆனால், ஆரம்பத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது பாண்டிச்சேரி லொகேசனில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. அதையடுத்து, பார்த்திபன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தபோது சில பிரச்சினைகளால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்போது அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது, நயன்தாரா இந்த படத்துக்காக கொடுத்திருந்த கால்சீட் தீர்ந்து விட அவர், வெவ்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதோடு, ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் விஜயசேதுபதியின் கால்சீட்டும் கிடைப்பது அரிதாக உள்ளதாம். ஆக, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நானும் ரவுடிதான் படப்பிடிப்பு இதுவரை 20 சதவிதம்தான் படமாக்கப்பட்டுள்ளதாம்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions