விஜய் சேதுபதியுடன் குத்து ஆட்டம் போடும் நயன்தாரா!

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் குத்து ஆட்டம் போடும் நயன்தாரா!

விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடவிருக்கிறார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா. இந்த வருடத்தில் அடுத்தடுத்து 3 ஹிட்களைக் கொடுத்து ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடவிருக்கிறாராம் நயன்.

இந்தப் பாடலை அடுத்த வாரத்தில் படம்பிடிக்க இருப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி வட்டாரப் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி - சீனு ராமசாமி 3 வது முறையாக இணையும் இப்படத்தில் ராதிகா மீண்டும் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடிக்கிறார்.

தர்மதுரை மூலம் முதன்முதலாக ஆக்ஷன் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் சீனு ராமசாமி ஜல்லிக்கட்டு மற்றும் அது தொடர்பான காட்சிகளையும் படம்பிடிக்க இருக்கிறாராம்.

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பு மிகவும் பேசப்பட்டதால், இந்தப் படத்திலும் செண்டிமெண்ட் கருதி நயனை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவெடுத்திருக்கிறது படக்குழு.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions