விஜயசேதுபதியை ரவுடிகளை வைத்து அடித்த நயன்தாரா!

Bookmark and Share

விஜயசேதுபதியை ரவுடிகளை வைத்து அடித்த நயன்தாரா!

விஜயசேதுபதி-நயன்தாரா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் நானும் ரெளடிதான். தனுஷ் தயாரித்து வரும் இப்படம் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது விஜயசேதுபதி- நயன்தாரா இரண்டு பேருமே பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்கள் என்பதால், அவர்களின் கால்சீட் கிடைக்கும் போதெல்லாம் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாக சொல்கிறார்கள். மேலும், இந்த படத்தில் கதைப்படி ஆரம்பத்தில் விஜயசேதுபதி, நயன்தாராவின் கேரக்டர்கள் எதிரும் புதிருமாகவே அமைக்கப்பட்டுள்ளதாம்.

அதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் வெடிக்க, தனது சார்பில் சில ரவுடிகளை செட் பண்ணி விஜயசேதுபதியை அடிக்க அனுப்புவாராம். இந்த காட்சியில் இறுதியில் நயன்தாரா அனுப்பி வைத்த ஆட்களை விஜயசேதுபதி அடித்து துவம்சம் செய்து அனுப்பி விடுவாராம்.

அதோடு, தன்னை அடிக்க ஆள் அனுப்பியது நயன்தாராதான் என்பதை தெரிந்து கொள்ளும் அவர், நானும் ரவுடிதாம்மா. எங்கிட்ட மோதுற வேலையெல்லாம் வேண்டாம் என்று போனில் மிரட்டல் விடுவாராம்.

இப்படி மோதல் ஏற்படும் அவர்களுக்கிடையேதான் ஒரு கட்டத்தில் மோதலே காதலை உருவாக்கி விடுமாம். இப்படியொரு காட்சியைதான் சமீபத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions