விஜயசேதுபதியின் ஆட்டத்தை ரசித்த நயன்தாரா!

Bookmark and Share

விஜயசேதுபதியின் ஆட்டத்தை ரசித்த நயன்தாரா!

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்தான் முதன்முறையாக ஒரு பாடலில் நடனமாடினார் விஜயசேதுபதி. அதையடுத்து அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தில் ஒரு குத்துப்பாடலில் நடனமாடியவர், வன்மம் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடனமாடினார்.

ஆக, ஆரம்பத்தில் நடனமாட தடுமாறி வந்த விஜயசேதுபதி படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். அதனால் இப்போது புறம்போக்கு படத்திலும் ஒரு பாடலில் ஆர்யாவுடன் இணைந்து ஆட்டம் போடுகிறாராம் விஜயசேதுபதி.

இதையடுத்து, இதுவரை கதாநாயகிகளுடன் அதிக நெருக்கம் காட்டி நடிக்காத விஜயசேதுபதி, இப்போது நானும் ரெளடிதான் படத்தில் நயன்தாராவுடன் அதிரடி நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

சில கடினமான மூவ்மெண்டுகளைகூட அவர் எளிதாக ஆடி விடுவதைப்பார்த்த நயன்தாராவே பல இடங்களில் விஜயசேதுபதியின் ஆட்டத்தைப்பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறாராம். இதை தனது நட்பு வட்டாரங்களில் பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார் விஜயசேதுபதி.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions