ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!

Bookmark and Share

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!

வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் இந்திய சினிமாவிலேயே சிலர் தான். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அவரது அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' நாளை பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை '7C's Entertainment Private Limited' மற்றும் 'Amme Narayana Entertainment' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' குறித்து அதன் இயக்குனர் ஆறுமுக குமார் பேசுகையில் , '' இது ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். இந்த கதை களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது பெஸ்ட்டை தந்துள்ளனர்.

விஜய் சேதுபதி அவர்களுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவமாகும். அவர் எவ்வளவு அருமையான நடிகர் மற்றும் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை.

தனது அசுர நடிப்பால் இந்த கதையை வேற லெவெலிற்கு அவர் உயர்த்தியுள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். அதே போல் தான் காயத்ரி மற்றும் நிஹாரிகாவில் கதாபாத்திரங்கள் மற்றும் இவர்களின் நடிப்பும்.

ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கத்தில் எங்கள் படத்தை கண்டு ரசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் '' இந்த படத்தை 'Clap Board Production' நிறுவனம் சார்பாக திரு.V. சத்தியமூர்த்தி அவர்கள் தமிழகமெங்கும் முன்னூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறார்.

 


Post your comment

Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!
ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions