நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் பார்த்திபன்

Bookmark and Share

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் பார்த்திபன்

தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் பார்த்திபனும் இணைந்துள்ளார்.

பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கும்’ என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் ரௌடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். இப்படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.  


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions