விஜய் சேதுபதி நடிப்பில் பீட்சா 2 – அறிவிப்பு வெளியானது!

Bookmark and Share

விஜய் சேதுபதி நடிப்பில் பீட்சா 2 – அறிவிப்பு வெளியானது!

அதிகம் படித்த மக்கள் முதல் சராசரியான பாமர மக்கள் வரை எல்லோர் மனதிலும் எளிதாக நுழைய கூடிய ஒன்று, சினிமா.

அதற்கு எந்தவித மொழியும் தேவை இல்லை என்பதை தற்போது ஆழமாக உணர்த்தி இருக்கிறது, விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம்.

தெலுங்கில் ‘பீட்சா – 2’ என்று தலைப்பிடப்பட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது…..கடந்த நவம்பர் 27 ஆம் தேதி, ஹைதெராபாத்தில் விமர்சையாக நடைபெற்ற இந்த படத்தின் இசை விழாவே அதற்கு சிறந்த உதாரணம்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், தம்மா ரெட்டி பரத்வாஸ், பெல்லம்கொண்ட சுரேஷ், எஸ் வி ஆர் மீடியா – சோபராணி, இசையமைப்பாளர் மந்த்ரா ஆனந்த் மற்றும் மல்காப்புறம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டது மேலும் சிறப்பு.

‘பீட்சா – 2’ (புரியாத புதிர்)படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை டி வி சினி கிரியேஷன்ஸ் சார்பில் டி வெங்கடேஷ் வாங்கி இருக்க, ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் ஜே சதீஷ் குமார், மாருதி மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் ஜே சதீஷ் குமார் ‘பீட்சா – 2’ படத்தின் இசை தட்டை வெளியிட, அதை பெல்லம்கொண்ட சுரேஷ் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

“நல்ல கதை களங்கள் கொண்ட திரைப்படங்கள் அனைத்தும் வர்த்தக உலகில் வெற்றியை தான் தழுவி இருக்கின்றது….அப்படி ஒரு திரைப்படமாக எங்களின் ‘பீட்சா – 2’ இருக்கும்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions