புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாகும் கே.எஸ்.ரவிக்குமார்

Bookmark and Share

புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாகும் கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பல்வேறு படங்களில் காமெடி, குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘தங்கமகன்’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், விஜய் சேதுபதி தற்போது நடிக்கவிருக்கும் ‘ரெக்க’ படத்தில், விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கதாபாத்திரம் தந்தை-மகனுக்கும் உள்ள உறவை நன்கு பிரதிபலிப்பதாக இருக்கும் என்று இயக்குனர் ரத்ன சிவா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இப்படத்தின் கதைப்படி, விஜய் சேதுபதி பெங்களூரில் சட்டப்படிப்பு முடித்துவிட்டு தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வருகிறார். அங்கு இரு பெரிய தாதாக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் இவர் மாட்டிக்கொள்கிறார். பின்னர், கதைக்களம் மதுரைக்கு செல்கிறது. கும்பகோணத்தில் வரும் தாதாக்களாக ‘வேதாளம்’ பட வில்லன் கபீர் சிங்கும், ஹரிஷ் உத்தமனும் நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் லட்சுமிமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் இவர் காலேஜ் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மே 12 முதல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions