சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை

Bookmark and Share

சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை

விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. இந்நிலையில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவருடைய படங்களுக்கு கிடைத்துள்ளது.

அது என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம் கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ந் தேதி வெளியானது. இந்நிலையில், வருகிற 7-ந் தேதி அவர் நடித்த ‘றெக்க’ படமும் வெளியாகவிருக்கிறது. 

இரண்டு மாதங்களுக்குள் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை சத்யம் திரையரங்கில் ஏற்கெனவே விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்றாவதாக வரும் வெள்ளி முதல் ‘றெக்க’ படமும் வெளியாகவுள்ளது.

வெள்ளிக்கிழமை பார்த்தால் சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த மூன்று படங்களும் திரையிடப்பட்டு இருக்கும். சத்யம் திரையரங்க வரலாற்றிலேயே ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த பெருமையை விஜய் சேதுபதி பெற்றிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions