சிம்புவை அமீர் இயக்கும் படத்தில் விஜயசேதுபதியும் இணைகிறார்!

Bookmark and Share

சிம்புவை அமீர் இயக்கும் படத்தில் விஜயசேதுபதியும் இணைகிறார்!

பருத்தி வீரன் என்ற படம் டைரக்டர் அமீருக்கு பெரியதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஆனபோதும், அதன்பிறகு அவர் யோகி படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசினார். அந்த படம் வெற்றி பெறவில்லை.

அதையடுத்து ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் என்றொரு மெகா படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெற்றிருந்தால் அமீரின் டைரக்டர் மார்க்கெட் சூடுபிடித்திருக்கும். ஆனால் அந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.

அதனால் அதையடுத்து பெப்சியின் தலைவரான அமீர் பின்னர் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் ஆசையில் ஒரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு சில முன்னணி ஹீரோக்களை துரத்தினார். ஆனால் யாரும் கதை கேட்க செவிசாய்க்கவில்லை.

விளைவு, இப்போது மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் சிம்புவே அவரது கையில் எளிதாக சிக்கிக்கொண்டார். அதனால் அவரை வைத்து அடுத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அமீர்.

அதேசமயம், தனது மார்க்கெட்டும், சிம்புவின் மார்க்கெட்டும் மந்தமாக இருப்பதால் மார்க்கெட்டில் இருக்கிற ஒரு நடிகரும் தனது கூட்டணியில் இணைந்தால்தான் கரைசேர முடியும் என்பதால் இப்போது விஜயசேதுபதியையும் அந்த படத்தில் கூட்டணி சேர்த்திருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்கும் அமீர், சிம்பு-விஜயசேதுபதியுடன் இணைந்து தானும் ஒரு ரோலில் நடிக்கிறாராம். 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions