சிவகார்த்திகேயனை தொடர்ந்து லேடி கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி

Bookmark and Share

சிவகார்த்திகேயனை தொடர்ந்து லேடி கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி

சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார். சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்புக்கு மாறியுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜ குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போன்றே வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கிவரும் தியாகராஜா குமாரராஜா இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு லேடி கெட்டப் போட்டு நடிக்க வைத்துள்ளார். விஜய் சேதுபதி லேடி கெட்டப்புடன் நிற்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

படம் முழுக்க விஜய் சேதுபதி இந்த கெட்டப்பில் வருகிறாரா? அல்லது ஏதாவது ஒரு காட்சியில் மட்டும் இந்த கெட்டப்பில் வருகிறாரா? என்பது பிறகுதான் தெரியவரும். 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions