விஜய் சேதுபதியுடன் மோதலா? - சிவகார்த்திகேயன்

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் மோதலா? - சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதியுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நானும் அவரும் போட்டியா என்பதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்கணும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவர் இந்த நிலைக்கு வர தனுஷ் மிக உதவியாக இருந்தார்.

அவர் தயாரித்த எதிர்நீச்சல்தான் சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக்கியது. அடுத்து காக்கிச் சட்டையைத் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை தயாரிக்கிறார் தனுஷ்.

இதனால் விஜய் சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உரசல், மோதல் என செய்திகள் வெளியாகின. சிவகார்த்தியை மட்டம் தட்டத்தான் விஜய் சேதுபதியை உயர்த்திப் பிடிக்கிறார் தனுஷ் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து விஜய் சேதுபதி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "யாருக்கு யார் போட்டிங்கிறதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்கணும். நானா போய் 'வாங்க... நாம சண்டை போடலாம்'னு யாரையும் கூப்பிட முடியாது.நடிக்க வந்தப்ப வறுமையை ஜெயிக்கிறது பெரிய விஷயமா இருந்தது.

இப்போ முந்தின படங்களைவிட ஒரு படி மேல தாண்டிப் போறது சவாலா இருக்கு. இதுல எங்க போட்டி போட!நான் 'எதிர் நீச்சல்' நடிக்கும்போது, விஜய் சேதுபதி நடிச்ச 'பீட்சா' படம் ரிலீஸ் ஆச்சு. அவரோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசி பாராட்டினேன். நேர்ல பார்த்தா, நல்லா பேசிப்போம்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions