விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

Bookmark and Share

விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருக்கிறார்.

விஜய் சேதுபதி குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘விஜய் சேதுபதி என்னுடைய நண்பர். அவரது ஆரம்ப காலத்தில் இருந்து அவருடன் பழகி வருகிறேன். அவருடைய வளர்ச்சியை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் முன்னேறி வருகிறார். அவருடைய வளர்ச்சி அவரையே சார்ந்தது. சினிமாவில் நிறைய அரசியல் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து ஹீரோவாக இருக்கிறார். நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். திறமையானவர். ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். 

விஜய் சேதுபதியும் நானும் இணைந்து படம் உருவாக்க திட்டமிட்டோம். வரிசையாக அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் நான் தொந்தரவு செய்யவில்லை. நல்ல உயரத்திற்கு விஜய் சேதுபதி சென்று கொண்டிருக்கிறார். அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன்’ என்றார்.

எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கடா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions