'புலி' படத்தில் பாடும் விஜய், ஸ்ருதிஹாசன்...

Bookmark and Share

'புலி' படத்தில் பாடும் விஜய், ஸ்ருதிஹாசன்...

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்திற்கு  தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விஜய் இதற்கு முன் நடித்த “சச்சின், வில்லு” ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

அதற்குப் பின் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார். 'சச்சின், வில்லு' ஆகிய படங்கள் வியாபார ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

அதனால், மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தமிழில் தேவிஸ்ரீயால் இன்னும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

தற்போது 'புலி' படத்திற்காக சூப்பர் ஹிட் பாடலாக அமைய வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டு உழைத்து வருகிறாராம். இந்தப் படத்தில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் கூட பாடலைப் பாடியிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

விஜய் அவர் நடிக்கும் படங்களில் ஆரம்பக் காலங்களிலிருந்தே ஒரு ஹிட் பாடலைக் கண்டிப்பாகப் பாடி விடுவார். அது போலத்தான் இந்தப் படத்திலும் பாடியிருக்கிறார் என்கிறார்கள். ஆனாலும், அந்தத் தகவலை இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
ரசிகர்கள் ஆசையை அறிய முடியவில்லை: ஸ்ருதி ஹாசன்
புலி படத்தில் விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
\'புலி\' ஆகஸ்ட் ரிலீஸ் உறுதி...!
நீதிமன்ற தடையை மீறி நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்!
சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஸ்ருதிஹாசன் - புலி தயாரிப்பாளர்!
கேரளாவில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் விஜய்
புலி படத்தில் விஜய்-சுருதி பாடல்?
விஜய் படத்தில் யார் முதன்மை நாயகி!
விஜய் படத்தில் இன்று முதல் ஸ்ருதிஹாசன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions