விஜய் படத்தால் சிபிராஜுக்கு சிக்கல்?

Bookmark and Share

விஜய் படத்தால் சிபிராஜுக்கு சிக்கல்?

நடிகர் சிபிராஜ் இளையதளபதி விஜய்யின் ரசிகர்களில் ஒருவர் என்பது பலருக்கும் தெரியும். இந்நிலையில் விஜய்யின் படத்தால் சிபிராஜ் நடித்துள்ள கட்டப்பாவை காணோம் படத்திற்கு பெரிய சிக்கல் வந்துள்ளது.

பைரவா படம் நான்கே நாட்களில் 100 கோடி ருபாய் வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தாலும், விநோயோகஸ்தர்கள் அதிக தொகை கொடுத்து வாங்கியதால் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தை வெளியிட்ட ஸ்ரீ கிரீன் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்திடம் அவர்கள் நஷ்டஈடு கேட்டுவருவதாக செய்திகள் சமீபத்தில் வந்தது.

அதே நிறுவனம் தான் சிபிராஜின் கட்டப்பாவை காணோம் படத்தையும் வாங்கி வெளியிடுகிறது, அதனால் விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறார்களாம்.

இந்த படம் மார்ச் 17ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions