விஜய் படங்களுக்கு நிகராக.. சிவாவின் எதிர்நீச்சல் முதல் நாள் வசூல்!

Bookmark and Share

விஜய் படங்களுக்கு நிகராக.. சிவாவின் எதிர்நீச்சல் முதல் நாள் வசூல்!

தனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1ல் வெளியான எதிர் நீச்சல் முதல் ஒரு நாள் வசூல், நான்கு கோடியை எட்டியது தமிழ்ப்பட உலகில் சாதனையாகக் கருதப்படுகிறது.


இது விஜய் நடிக்கும் படத்தின் முதல் நாள் வசூலில் எண்பது சதவிகிதம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவர கணக்கில். உலகெங்கும் வெளியான படம், தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியானது குறிப்பிடத் தக்கது.


சிவகார்த்திகேயனின் மிகையில்லாத நகைச்சுவை கலந்த நடிப்பும், அனிருத்தின் இசையும் இளைஞர்களைக் கட்டி இழுத்திருக்கின்றன என்றால் மிகையாகாது. ஆர்.எஸ்.துரைசெந்தில்குமாரின் தெளிவான இயக்கத்தில் குடும்பங்கள் குதூகலிக்கும் படமாக அமைந்திருக்கிறது எதிர்நீச்சல்.


இந்த வசூல் சாதனையில் உண்டர்பார் பிலிம்ஸ் (பி) லிட் சார்பாகப் படத்தைத் தயாரித்த தனுஷும், வெளியிட்ட வேந்தர் பிலிம்ஸ் மதனும் மட்டுமல்லாது படத்தை வாங்கி திரையிட்டவர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.


ரசிகர்களை மகிழ்வித்தால் படத்தைத் தயாரித்தவர்களும் மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்பதற்கு எதிர் நீச்சல் இன்னொரு சாட்சியாகி இருக்கிறது.


Post your comment





Related News
ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி
இன்று \'விஜய்\' சிலை திறப்பு விழா
மீண்டும் விஜய்யுடன் இணைவேன்: முருகதாஸ்
இறந்த ரசிகருக்கு உதவி செய்த நடிகர்...
கத்தி பட திருட்டு சி.டி.: விஜய் ரசிகர்கள் பறிமுதல் செய்தனர்
ரஜினி- அஜீத்தை முந்திட்டாராமே கத்தி விஜய்!
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
டிசம்பரில் திரைக்கு வரும் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்
6 மகன்கள் இறுதிச் சடங்குகளைச் செய்ய எஸ்.எஸ்.ஆர் உடல் தகனம்
தல 55 படத்தில் அஜீத்-அருண்விஜய் இணைந்து நடனம்


Latest Gallery





About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions