சிவகார்த்திகேயன் அடுத்து விஜயுடன் இணையும் மோகன் ராஜா?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் அடுத்து விஜயுடன் இணையும் மோகன் ராஜா?

அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'தெறி' படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இப்படத்தை விஜயா வாஹினி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து உருவாக இருக்கும் விஜய் படத்தை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார். விஜய்யின் 60வது படத்துக்கு பல இயக்குநர்கள் கதைகளைத் தெரிவித்து வந்தார்கள். அந்த இயக்குநர்கள் பட்டியலில் மோகன் ராஜாவும் உண்டு. அக்கதையைத் தான் தனது 61வது படமாக தேர்வு செய்திருக்கிறார் விஜய். இப்படத்தை முன்னணி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மோகன் ராஜா. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்குகிறார்.

விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் மோகன் ராஜா. கதை நன்றாக இருக்கிறது, முழுமையாக தயார் செய்துவிட்டுச் சொல்லுங்கள் என தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு, விஜய் படத்துக்கான பணிகளில் தீவிரம் காட்ட திட்டமிட்டு இருக்கிறார் மோகன் ராஜா. விஜய் மற்றும் மோகன் ராஜா இருவரும் 'வேலாயுதம்' படத்தில் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions