விஜய் செய்ததை பின்பற்றும் சிவகார்த்திகேயன்?

Bookmark and Share

விஜய் செய்ததை பின்பற்றும் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ரெமோ’ படம் வசூல் சாதனை படைத்த நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். 

இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னை தி.நகரில் உள்ள சேரி பகுதியில் எடுத்து முடித்துள்ள படக்குழு, 2வது கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளது. முன்னதாக,

`தனி ஒருவன்' படத்தில் மருத்துவமனையில் நடக்கும் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இந்த படத்திலும் சமூக விழிப்புணர்வு குறித்த தகவலை மோகன் ராஜா முயற்சி செய்துள்ளாராம். முன்னதாக விஜய்யின் `மதுர' படத்தில் உணவுக் கலப்படம் குறித்த சமூக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர் ஜோதிகாவின் `36 வயதினிலே' படத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கும் படத்மும் உணவுக் கலப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்கு ஃபோனில் ஆறுதல் கூறிய விஜய்?
ஒரேபடத்தில் விஜய்யின் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்!
விஜய்க்கு நடந்த கொடுமை சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய தயாரிப்பாளர்!
விஜய்யின் இடத்தைப் பிடிப்பாரா சிவகார்த்திகேயன்
அஜித், விஜய் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் அடுத்து விஜயுடன் இணையும் மோகன் ராஜா?
அஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன்
விஜய் இடத்திற்கு ஆசைப்படுகிறாரா சிவகார்த்திகேயன்...?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions