விஜய்யின் அடுத்த பட கால்ஷீட் இவருக்கு தான்: உறுதிப்படுத்திய பல தகவல்கள்

Bookmark and Share

விஜய்யின் அடுத்த பட கால்ஷீட் இவருக்கு தான்: உறுதிப்படுத்திய பல தகவல்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி தினத்தில் வெளியிடவிருக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறாராம், இயக்குனர். தற்போது விஜய் தனது அடுத்த படத்தை உறுதி செய்யும் நிலையில் உள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் யார்? என்ற சர்ச்சை பல மாதங்களாகவே மீடியாவை கலக்கி வருகிறது. முதலில் எஸ். ஜே. சூர்யா மட்டும் தான் இதில் முன்னணி வகித்தார். பின்னர் இவருடன் மோகன் ராஜா மற்றும் ஹரி பெயரும் இணைந்தது. 

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாதான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் அவர் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டு, லொகேசன் பணிகளில் மும்முரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் செய்திகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன. ‘தலைவா’ படத்தை தயாரித்த ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்ஸ் சந்திரபிரகாஷ் ஜெயின் தான் ‘விஜய் 60’ படத்தை தயாரிக்கிறாராம்.

அதற்கு காரணம், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions