விஜய்க்கு பதில் பவர் ஸ்டாரை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!

Bookmark and Share

விஜய்க்கு பதில் பவர் ஸ்டாரை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!

குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கு "பவர் ஸ்டார்" பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் வெற்றிப்பட இயக்குநர்கள் வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவர். இவர் ஆரம்பக் காலத்தில் அஜித், விஜய் இருவருக்கும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இவரது இயக்கத்தில் 1999ல் வெளிவந்த வாலி திரைப்படம் அஜித்துக்கும், 2000-ல் வெளிவந்த படம் விஜய்க்கும் திருப்புமுனையாக அமைந்தது.

இயக்கத்திற்கு நடுவே படங்களில் நாயகன் மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது இறைவி படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அவர்.இதற்காக சமீபத்தில் விஜயை சந்தித்து அவர் கதையைக் கூறினார்.

ஆனால், தற்போது விஜய் கைவசம் தேதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இப்போதைக்கு தமிழில் குஷி 2ம் பாகத்தை விஜயை நடிக்க வைத்து இயக்குவது சாத்தியமில்லை.

இதனால் குஷி 2ம் பாகத்தை முதலில் தெலுங்கில் எடுக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தெலுங்கு நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாணை சந்தித்து அவர் கதையைக் கூறியுள்ளார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் குஷி படம் பெரும் வெற்றி பெற்றது. அதில் நடித்திருந்த பவன் கல்யாணுக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கொமரம் புலி என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார் பவன்.

ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதில் என்ன ஆச்சரியம் என்றால் முதலில் விஜய்தான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அது சரிவராததால் புலியை தெலுங்கில் கொமரம் புலியாக்கினார் சூர்யா.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions