விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்

Bookmark and Share

விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்

விஜய் என்ற பெயர் 15 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகரின் பெயராகவே மக்களுக்கு அறியப்படும். ஆனால், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்கள் வீட்டிலும் ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ, மகனாகவோ அறியப்படும் பெயராகிவிட்டது.

அந்த அளவிற்கு விஜய் இன்று ரஜினிக்கு அடுத்த இடத்தை நோக்கி பயணிக்கின்றார், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க அத்தனை தகுதிகளும் விஜய்க்கு வந்துவிட்டது.

ரஜினியும் இன்னும் சில வருடங்களில் அரசியலுக்கு செல்ல, அவரின் இடம் வெற்றிடமாகவோ என்று அஞ்சிய நிலையில் அதில் புயலாக நிரப்பி வருகின்றார் தளபதி. சரி விஜய்யின் பயணம் சினிமாவுடன் நின்றுவிடுமா? என்றால் பதில் இல்லை.

ஆனால், சினிமாவை தாண்டி விஜய் கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தை நோக்கி பயணிக்கின்றார் என்றே சொல்லலாம். அதை அவர் விரும்பவில்லை என்றாலும், அவரை சுற்றி நிகழும் எதிர்ப்பு குரல்கள் அதை செய்ய வைத்துவிடும் போல, விஜய் எது செய்தாலும் ஒரு எதிர்ப்பு வந்துக்கொண்டே இருக்கின்றது.

அவரும் அதை புறம் தள்ளி ஒரு படி மேலே சென்றுக்கொண்டே தான் இருக்கின்றார். டைம் டூ லீட் என்ற காரணத்திற்காக படத்தையே தடுத்தார்கள், அதை தொடர்ந்து ஒரு நிறுவனத்திற்காக கத்தியை தடுத்தார்கள்.

ஆனால், அந்த நிறுவனம் இன்று சூப்பர் ஸ்டாரையே வைத்து படம் எடுக்கின்றது. வருமான வரி சோதனை, அதிலும் ரிலிஸ் டைமில் ப்ரேஷர் கொடுப்பது என தொடர்ந்து விஜய் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை, இப்போது சிகரெட் வடிவில் வந்து நிற்கின்றது, ஆனால், இந்த கண்டிப்பு நல்லது தான்.

அதை ஏற்று விஜய் கூட தன் பர்ஸ்ட் லுக்கையே டெலிட் செய்தார், அந்த அளவிற்கு ஒருவரின் பேச்சை காது கொடுத்து கேட்கும் இடத்தில் தான் அவர் இருக்கின்றார். ஆனால், அதே கட்சி எத்தனை படத்திற்கு குரல் கொடுத்திருக்கும், இன்று சிரிப்பதற்காகவே பல சேனல்கள் தொடங்கிவிட்டனர்.

அதில் தன் காமெடி முழுவதும் குடி, பெண்களை குறை சொல்வது என இருக்கும் சந்தானத்தை ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை என்று நாங்கள் கேட்கவில்லை, ரசிகன் கேட்கின்றார்.

சரி, சந்தானமும் விஜய்யும் ஒன்றா? எனலாம், ஆனால், விஜய் எந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றாரோ, அதே அளவிற்கு 24 மணி நேரத்தில் ஏதோ ஒரு வடிவில் நம் தொலைக்காட்சியில் வரும் சந்தானமும் வளரும் இளைஞர்கள், சிறுவர்களுக்கு பெரும் தாக்கத்தை தான் உருவாக்குவார்.

நம் எதிர்ப்பு என்பது எல்லோரிடத்திலும் ஒரு மாதிரி அல்லவா இருக்கவேண்டும், சில மாதங்களுக்கு முன் அருவி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் நாயகி சிகரெட் பிடிப்பது போல் வெளியிட்டனர்.

அதை எல்லோரும் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள், அப்போதும் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும் அல்லவா, அந்நியன் படத்தில் சொல்வது போல் தவறில் என்ன லார்ஜ் சைஸ், எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்?.

எது எப்படியோ விஜய் படம் வந்த போது வரும் எதிர்ப்பு காலம் போய் தற்போது டைட்டில், போஸ்டர் வரும் போதே எதிர்ப்பு கிளம்புகின்றது, இப்படி பல அரசியல் தலைவர்கள் கவனம் முழுவதும் ரஜினியை தாண்டி தற்போது விஜய் மீது விழுந்துள்ளது அவரின் விஸ்வரூப வளர்ச்சியை தான் காட்டுகின்றது.

இந்த வளர்ச்சி அவரை எங்கு கொண்டு செல்ல போகிறது, சூப்பர் ஸ்டார் என்ற அரியணையிலையா? இல்லை..... அதை மக்கள் முடிவு செய்யட்டும்.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions