விஜய்யுடன் மோத விரும்பாத சூர்யா

Bookmark and Share

விஜய்யுடன் மோத விரும்பாத சூர்யா

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தெறி’. அதேபோல், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘24’. இவ்விரு படங்களும் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகப் போவதாக சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தது. 

இந்நிலையில், ஏப்ரல் 14-ந் தேதி ‘24’ படத்தை வெளியிடப்போவதில்லை என அப்படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. எனினும், ஏப்ரலில் இப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று கூறுகிறார்கள். 

‘தெறி’ வெளியாகும் தேதியில் தங்களது படத்தையும் வெளியிட்டால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா 3 கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

‘தெறி’ படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

மேலும், விஜய்யின் மகளும் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘தெறி’ டீசர் நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
அஜித், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்க்கிய சூர்யா - என்னனு நீங்களே பாருங்க.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.!
ஒரே நாளை குறிவைத்த தலதளபதி, சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions