விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!

Bookmark and Share

விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!

தல அஜித் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் கசிந்து இருந்தன.

ஆனால் தற்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் ஸ்ட்ரைக் முடிந்த பின்னரே படப்பிடிப்புகள் தொடங்குமாம். இதனால் தீபாவளிக்கும் படப்பிடிப்புகளை முடித்து ரிலீஸ் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என கூறப்படுகிறது.

எனவே விஸ்வாசம் படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி கொள்வதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்த தகவல்கள் தல ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திட்டமிட்டபடி தளபதி 62 மற்றும் NGK படங்கள் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions